August, 2017    
புதிய அலுவலகக் கட்டடம் திறப்புவிழா
நிகழ்வு நாள் :
08.02.2016
தலைப்பு : புதிய கல்வி, நிருவாகக் கட்டடம் மற்றும் ஆய்வறிஞர் விடுதி
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில்  சென்னை, தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூபாய் 5.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கல்வி, நிருவாகக் கட்டடம் மற்றும் ஆய்வறிஞர் விடுதி  ஆகியவற்றை (08.02.2016)  திறந்து வைத்தார்கள். தமிழ் உயராய்வுப் பணியில் மாபெரும் சாதனையான இந்நிகழ்ச்சியைத் தமிழ்ச்சான்றோர்களும் கல்வியாளர்களும் ஆய்வு மாணவர்களும் நிருவாக அலுவலர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் இந்நிறுவனத்தின் ஓய்வுபெற்ற கல்வியாளர்கள் மற்றும் நிருவாக அலுவலர்களுக்கும் மற்றும்   விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.