April, 2019
தமிழ்த்தாய் 68 – பிறந்தநாள் பெருவிழாக் கவியரங்கம்
நிகழ்வு நாள் :
24.02.2016
தலைப்பு : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் பெருவிழாக் கவியரங்கம்
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாள் பெருவிழா தமிழ்த்தாய்-68 பெருவிழா என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்வளர்ச்சித் திட்டங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து பாமாலை சூட்டிப் பாராட்டும் நோக்கத்தோடு தமிழகமெங்கிலுமிருந்து  கலந்துகொண்ட 68 கவிஞர்களின் கவியரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்க அறையில் நடைபெற்றது. “தாய்த்தமிழ் நாடுபோற்றும் தங்கத் தாரகையின் தமிழ்வளர்ச்சி சாதனைகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற இக் கவியரங்கத்திற்கு டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியரும் உ.வே.சா.விருதாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் அறக்கட்டளையின் சிறப்புத்தலைவர் கவிஞர் துரை.ராசமாணிக்கம் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் கூட்டமைபின் தலைவர் கவிஞர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலையுரை நிகழ்த்தினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வரவேற்புரை ஆற்றினார். இந்தக் கவியரங்கத்தில் அந்தமான் சோழன். சிந்தைவாசன் சென்னை, கவிஞர் தாமரைப்பூவண்ணன் சென்னை, கவிஞர் சொர்ணபாரதி சென்னை, கவிஞர் சுரதா கல்லாடன்  சென்னை, கவிஞர் உடையார் கோயில் குணா தஞ்சாவூர், பேரா. வேட்டவராயன் திண்டிவனம், இதயகீதம் இராமானுஜம் சென்னை, நம்ம ஊர் கோபிநாத் சென்னை, அரிமா மு.மணி ஈரோடு, கவிஞர் பூவைத் தமிழன்  ஈரோடு, கவிஞர் சுலோச்சனா சென்னை, கவிஞர் பிரேமா அண்ணாநகர், சாரதாதிருமலை வேலூர், தாமரைச் செல்வி போரூர், கலாலா லஜபதி  பெங்களுரூ, உணர்வுப் பாவலர் உசேன் புதுச்சேரி, ப. திருநாவுக்கரசு  புதுச்சேரி, பா.இராசேந்திரன் புதுச்சேரி, வசீகரன் சென்னை,  விசித்திரன்  சென்னை, பொன். தங்கவேலன் ஆரணி, இரா. துரைமுருகன் தியாகதுருகம், சிங்கார உதியன் திருக்கோவிலூர், பாரதி மணாளன் திருக்கோவிலூர், தேவ.சுந்தர வடிவேலு திருக்கோவிலூர், இரா.பொன்னுப் பிள்ளை  தொட்டியம், வ.ர.கணேசனார் தியாகதுருகம், மான்.கு.ஏழுமலை திண்டிவனம், செம்மொழி குமார் புதுக்குப்பம், ஜெனாதட்சன் காஞ்சிபுரம், கவிஞர் சுரா சென்னை, வனத்துறை இராமச்சந்திரன் சென்னை, இராம் மோகனதாசு சென்னை, ச.ப.மேகநாதன் சென்னை, முல்லை அன்பரசன் ஆவடி, கூரம்துரை காஞ்சிபுரம், பாவலர் மலரடியான் காஞ்சிபுரம், கவிதைத்தம்பி சின்னசேலம், பெ.அறிவழகன் சின்னசேலம், தி.க.நாகராசன் விழுப்புரம், கூ.பிச்சைப்பிள்ளை உளுந்தூர்ப்பேட்டை, சண்முகபிச்சைப்பிள்ளை விருதுநகர், பு.ப.பன்னீர்செல்வம் விருதுநகர், மு.ஜெயலட்சுமி குரோம்பேட்டை, மு. இராஜகருணாகரன் அம்பத்தூர், தொலைபேசி மீரான், சென்னை, ஈ.விஜய், கன்னியாகுமரி, திருவைபாபு, சென்னை, கவிஞர் மாவிறையான் சென்னை, இராம பரஞ்சோதி சென்னை, புலவர் இளஞ்செழியன் சென்னை, இராம. சுதாகரன் திருக்கோவிலூர், அரிமா.து.சி.இராமையா சென்னை, தஞ்சை சீனிவாசன் சென்னை, பொன்.சுந்தரம் செங்கற்பட்டு, வேத.பெருமாள் வில்லியம்பாக்கம், வே.அருட்பாமணி காஞ்சிபுரம், து.பத்மபிரியா காஞ்சிபுரம், வி.இந்துமதி  ஆரணி, பரந்தூர் இராமசாமி திருவள்ளூர், த.சீ. பாலு சென்னை, ந.கோமுகிதாசன் கச்சராபாளையம், அல்லூர் இராசலிங்கம் தாமோதரன், அரும்பாக்கம், அன்வர் பாட்சா ஊரப்பாக்கம், பெ.காப்புசாமி வண்டலூர், துரை.இராசமாணிக்கம் திண்டிவனம், ப.கோ.நாராயணசாமி தியாகதுருகம் ஆகிய 68 கவிஞர்கள் கலந்துகொண்டு கவிபாடினர். இறுதியில் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் கவிஞர் த.உடையார் கோயில் குணா நன்றியுரை நவின்றார்.