May, 2017    
தமிழ்த்தாய் 68 – இனிப்பு வெட்டிப் பிறந்தநாள் கொண்டாட்டம்
நிகழ்வு நாள் :
24.02.2016
தலைப்பு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் 68 கிலோ இனிப்பு அட்டு(கேக்) வெட்டி, கொண்டாட்டம்
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆவது பிறந்தநாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் - 68 பெருவிழாவாக, பிப்ரவரி மாதம் 01.02.2016 முதல் 29.02.2016 வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 24.02.2016-ம் நாள் அதிகாலை 00.01 மணிக்கு 68 கிலோ எடையுள்ள இனிப்பு அட்டு(கேக்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு.கே.சி.வீரமணி அவர்களால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.செந்தமிழன், எம்.ஏ.,எம்.எல்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழிசை இரவில் பங்கேற்ற குழந்தைகள்.