April, 2019
தமிழ்த்தாய் 68 – ஆய்வு நூல்கள் வெளியீடு
நிகழ்வு நாள் :
24.02.2016
தலைப்பு : 77 ஆய்வு நூல்கள் வெளியீடு
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 68ஆவது பிறந்தநாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் 68 பெருவிழாவாக, பிப்ரவரி மாதம் 01.02.2016 முதல் 29.02.2016 வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வரிசையில், இருபத்தி மூன்றாம் நாள் (23.02.2016) நிகழ்வாக கலைமாமணி சங்கீதசேது டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி தலைமையில் 209 கலைஞர்கள் பங்குபெற்ற “தமிழிசை விழா” நடைபெற்றது. இருப்பதி நான்காம் நாள்  24.02.2016 புதன்கிழமை முற்பகல் 10 மணிமுதல் 12.30 மணிவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்க அறையில் வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 68 நூல் வெளியீடுகள் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரை ஆற்றினார். பள்ளிக்கல்வித்துறை மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் பா.இராசா, முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் ஆ.மணவழகன், முனைவர் அ.சதீஷ், முனைவர் க.சுசீலா, முனைவர் நா.சுலோசனா, முனைவர் கு.சிதம்பரம், முனைவர் து.ஜானகி, முனைவர் சு.தாமரைப் பாண்டியன், முனைவர் கோ.பன்னீர்செல்வம், முனைவர் கா.காமராஜ், முனைவர் வி.இரா.பவித்ரா, தனி அலுவலர் திரு.தா.மார்டின் செல்லதுரை, திரு.எஸ்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத்துறைத் தலைவர் முனைவர் ஆ.தசரதன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் கருத்துரை ஆற்றினார். தொடர்ந்து முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் அறப்பளீசுர சதகம் உரை, இராசராச சோழன் உலா உரை, குமரேச சதகம் உரை,   திருக்களர்ப் புராணம் உரை,     திருவரங்கக் கலம்பகம் உரை,     திருவேற்காட்டுப் புராணம் உரை, நந்தனாரேலப் பாட்டு உரை,  ஸ்ரீ முருகானந்த சுவாமிகள் உரை என்னும் நூல்களும் முனைவர் ஔவை ந. அருள் அவர்களின் சொற்தொகுதி, அருந்தமிழில் அயற்சொற்கள் ஆகிய நூல்களும் மொழிபெயர்ப்புத்துறை-உலகத் தமிழராய்ச்சி நிறுவன வெளியீடுகளாக ஆத்திசூடி (இத்தி), ஆத்திசூடி (மலையாளம்), ஆத்திசூடி (தெலுங்கு) என்னும் நூல்களும் பேரா. இராசா திட்டப்பணியில் மணிமேகலை, நளவெண்பா, குலசேகராழ்வார், நம்மாழ்வார், நேமிநாதம், யாப்பருங்கலக் காரிகை, திருநாவுக்கரசர் -1, திருநாவுக்கரசர் -2, திருஞானசம்பந்தர் என்னும் நூல்களும் பாலசுப்பிரமணியத்தின்   Paavendar Selected Poems நூலும் முனைவர் ஆ.மணவழகனின் பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு நூலும்  முனைவர் கு. சிதம்பரம்பரத்தின் மொழி – இலக்கியம் உரிமைகள் நூலும் முனைவர் க.சுசீலா கணேசனின் தமிழில் மொழியியல் ஆய்வுகள்: விளக்க நூலடைவு நூலும் முனைவர் பன்னீர்செல்வத்தின் பாரதிதாசனின் ஆக்கங்களில் நாட்டார் வழக்காற்றியலும் அலை குடியியலும் முனைவர் சு.தாமரைப்பாண்டியனின் கதைப்பாடல் சுவடித்திரட்டும் பதிப்பும் (பகுதி-5) என்னும் நூலும் முனைவர் நா.சுலோசனாவின் பெருஞ்சித்திரனார் மொழி-இனம்-நாடு  நூலும் முனைவர் கா.காமராஜின் செஞ்சி வட்டார புழங்குபொருள் பண்பாடு என்னும் நூலும் முனைவர் வி.இரா.பவித்ராவின் புலயரின் வாழ்வியல் சடங்கு முறைகளும் முனைவர் தி.மகாலட்சுமியின் குணங்குடி மஸ்தான் சாகிபின் படைப்புகள், இலக்கியச் சுடர், பாரசரியம் மூலம்-உரை-ஆய்வு என்னும் நூல்களும் தா. மார்டின் செல்லதுரையின் ஆன்மாவின் குரல் நூலும் லட்சுமி நடராசனின் சமூகவியல் கவிதைகள் நூலும் முனைவர் மூ.தமிழரசி, முனைவர் சிவகாமி, முனைவர் அ.கவிதா ராணி, முனைவர் அ.பாப்பா, முனைவர் குளோரியா வீடாஸ்  ஆகியோரின் இலக்கிய வனம் என்னும் நூலும் முனைவர் அரங்க லோகாம்பாள் அவர்களின் சங்கப் பறப்பாடல்களில் அஃறிணை உயிர்கள், சங்க களவுப் பாடல்களில் அஃறிணை உயிர்கள், புறநானூற்றில் நீதி உரைகள், சங்க கற்புப் பாடல்களில் அஃறிணை உயிர்கள் என்னும் நூல்களும் பேராசிரியர் ப.வேட்வராயனின் திருக்குறள் வழியில் அம்மாவின் ஆட்சி நூலும் கவிஞர் வீ.சேதுராமலிங்கத்தின் புரட்சித்தலைவி அம்மா பிள்ளைத் தமிழ்   நூலும் செ.ஏழுமலையின் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா பிள்ளைத் தமிழ் நூலும் பேரா.முனைவர் வி.சி.தியாகராசனின் சங்க இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் நூலும் பேரா.முனைவர் இலலிதா சுந்தரத்தின்  ஔவையாரின் பன்முகங்கள் நூலும் முனைவர் சரளா ரங்கநாதனின் கலைச்சொல் அகராதிகள் நூலும் முனைவர் க.ஜெயந்தியின் தமிழ் நாவல்களில் சமூகச் சிக்கல்கள் நூலும் முனைவர் சு. தமிழ்ச்செல்வியின் பாவேந்தரும் தமிழக மறுமலர்ச்சியும், பெரியபுராணத்தில் வயலும் வாழ்வும்  என்னும் நூல்களும் முனைவர் தி.சுமதியின் மரபிலக்கண ஆய்வுகள் நூலும் முனைவர் ம.பெ.சீனிவாசனின் திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் நூலும் முனைவர் சா.வளவனின் ஆண்டாள் அருளிச்செயல்கள் இராம்.மோகன் தாசின்  வள்ளுவமும் வாழ்க்கை நெறியும், பாரதியார் அன்றும் இன்றும், வள்ளுவன் கண்ட உலகம், வள்ளுவரும் – கம்பரும் என்னும் நூல்களும் வ. பாக்கியராஜின் செங்குந்தர் துகில் விடுதூது நூலும் வ. மணிகண்டன்     சிங்கப்பூர் தமிழ்க் கவிதை வளம் - க.து.மு.இக்பால் - ஓர் ஆய்வும் மு. சசிகுமாரின் பழமொழி நானூறு காட்டும் வாழ்வியல் விழுமியங்கள் நூலும் இரா. ஆனந்த ஜோதியின் வைணவ நெறியும் வாழ்க்கை முறையும் நூலும் மா.ஆதிமூலத்தின் கலித்தொகைப் பாடல்வழி அறியலாகும் சங்ககாலச் சமூக அமைப்பு முறை நூலும் பா. உமா சங்கரியின் இணையம் வழித் தமிழ்க் கற்றல் கற்பித்தல் – மதிப்பீடு நூலும் ந. வள்ளியின் தமிழ் இலக்கிய வரலாற்றில் முச்சந்தி இலக்கியங்கள்  - ஒரு பார்வை நூலும் கே. அல்லியின் தமிழ்ப் பண்பாட்டு மரபில் மலர்கள் - ஓர் ஆய்வும் திருமதி. பத்மபிரியா சாந்தகுமாரின் தொண்டை நாட்டு வைணவத் தலங்கள் ஆ. உமாவின் கலித்தொகையில் பழந்தமிழர் வாழ்வியல் தேவியின் தொல்காப்பிய நோக்கில் பெரும்பாணாற்றுப்படையில் இடைச்சொற்கள் செ. துளசிராமனின் செம்பை சேவியரின் கவிதை சிந்தனைகள்    நூலும் தேவி.மூ அவர்களின் அழகின் சிரிப்பு, திருவாசகத்தில் சமுதாய நலன் ஆகிய நூல்களும் வே.அருட்பாமணியின் திருமணம் வரம் தரும் திருத்தலம் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் நூலும் இரா.கீதா ரத்தினப் பிரியாவின் பதிற்றுப்பத்து-ஓர் ஆய்வு நூலும் திருமதி சே.பானுரேகாவின் சங்க இலக்கியத்தில் அணிகலன்கள் வி.இந்துமதியின் திருவலம்-வில்வநாதீஸ்வரர் திருத்தல வரலாறு நூலும் பாக்கம் தமிழனின் நலம் தரும் நாட்டு மருத்துவம் 400 உள்ளிட்ட 77 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. இந்நிகழ்வின் நிறைவாக, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனக் கண்காணிப்பாளர் இரா.இராசா நன்றியுரை ஆற்றினார்.