October, 2017    
தொல்காப்பியர் ஆய்விருக்கையின் ஆறாவது சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
27.07.2016
தலைப்பு : தொல்காப்பியத் தாவரங்கள்
   

உயர் தமிழ் ஆய்வுகளுக்கும் தமிழ் ஆய்வறிஞர்களுக்கும் தொடர்ந்து உதவிபுரிந்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நிதியுதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள ‘தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின்’ சார்பாக 27.7.2016 அன்று ‘தொல்காப்பியத் தாவரங்கள்’ என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வரிசை – 6 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமையுரையில் தாவரங்களின் பயன்பாட்டினைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் எடுத்துரைத்து விழாவினைத் தொடக்கி வைத்தார். தொல்காப்பியத் தாவரங்கள் என்னும் தலைப்பில் உரைநிகழ்த்திய பண்ருட்டி இரா.பஞ்சவர்ணம் அவர்கள் இந்தியாவில், 15,800 தாவரங்களையும், தமிழகத்தில், 5,766 தாவரங்களையும் அடையாளம் கண்டுள்ளோம். அதில், 696 தாவரங்கள் மூலிகையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், கடு, வேம்பு ஆகியவற்றை மட்டும், தொல்காப்பியம் மருத்துவ குணங்களோடு தொடர்புபடுத்தி கூறுகிறது. 18ம் நுாற்றாண்டில் எழுந்த உலகளாவிய தாவர கருதுகோள்களின் படி, ஸ்வீடனை சேர்ந்த கார்ல் லின்னேயஸ், இருபெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தி, தாவரங்களை அடையாளப்படுத்தினார். தமிழில் வழங்கும் தொன்மையான இலக்கணமான தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள 55 வகையான தாவரங்களின் தன்மை மற்றும் பயன்பாடு குறித்தும் அவற்றின் தாவரவியல் குடும்ப அடிப்படையிலும் தொகுத்துக் கூறினார். மேலும் தொல்காப்பியர் கூறிய தாவரங்கள் சங்ககாலம் தொட்டு தென் தமிழகத்தில் காணப்பட்ட தாவரங்கள் அவை - இலக்கியங்களில் வழங்கும் தன்மை குறித்தும் இதுபோன்ற தமிழ் ஆய்விருக்கைகளுக்கும் தமிழ் ஆய்வுகளுக்கும் தமிழ் ஆய்வறிஞர்களுக்கும் தொடர்ந்து உதவிபுரிந்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி கூறினார். இறுதியில் தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் பொறுப்பாளர் முனைவர் அ.சதீஷ் நன்றியுரை கூறினார்.