மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மேலான ஆணைப்படி மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பணிகள் ஆய்வுக் கூட்டம் 27.10.2016 அன்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்செயலர் திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நிறுவனக் கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.