உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பல கோடிகளில் திட்டங்கள் தந்து உயர் தமிழாய்வினை வளர்த்தெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவினை ஏந்தும் நிகழ்வு இன்று (07.12.2016) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் (பொ) இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், அகரமுதலி இயக்குநர் முனைவர் கோ.செழியன் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அகரமுதலி பணியாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.