July, 2017    
மலேசியத் தமிழாசிரியர்கான இலக்கியப் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
23.03.2017
தலைப்பு : மலேசியத் தமிழாசிரியர்கான இலக்கியப் பயிலரங்கம்
   

மலேசியத் தமிழாசிரியர்களுக்கான  இலக்கியப் பயிற்சிப் பட்டறை  2017 மார்ச்சுத் திங்கள் 22- 23 ஆகிய இரு நாட்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  நடைபெற்றது. இப்பயிற்சியில் மலேசிய நாட்டின் பேரா மாநில இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 32 பேர் பங்குபெற்றனர். இப்பயிலங்கில் எழுத்தாளர் ஜோ. டி. குருஸ் அவர்கள் ’புதின இலக்கியம்’ எனும் பொருண்மையிலும், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ’சிறுகதை இலக்கியம்’ எனும் பொருண்மையிலும், கவிஞர் சினேகன் அவர்கள் கவிதை இலக்கியம் எனும் எனும் பொருண்மையிலும் தமது பொழிவை வழங்கினர். நாடக ஆசிரியர் திரு கமலக்கண்ணன் அவர்களின் கிராமியத் தெருக்கூத்து நாடகமன்றம் ’முப்பிறவி’ எனும் தெருகூத்தையும் நிகழ்த்தியது. இப்பயிலங்கினை  அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்  ஆகியவை இணைந்து நடத்தியது. இப்பயிலங்கினை, நிறுவன இயக்குநர் பேரா.  முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றி நடத்தி வைத்தார்; மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்தனர்.