November, 2017
சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
10.09.2017
தலைப்பு : ஆஸ்திரேலியத் தொல்குடிகளும் தமிழும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு அவர்கள் ஆஸ்திரேலியத் தொல்குடிகளும் தமிழும் எனும் தலைப்பில் இன்று (முற்பகல் 13.09.2017 புதன் கிழமை) சிறப்புச் சொற்பொழிவினை வழங்கினார்.அவர் தமது பொழிவில் : ஆஸ்திரேலியத் தொல்குடிகள் தமிழர்களோடு மொழி, பண்படு, மரபணு ரீதியில் ஒத்துப்போவதாகவும் கூறினார். அவர்கள்  பயன்படுத்தும்  பூமராங் எனும் ஆயுதம் சிவகங்கை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள வளரி என அழைக்கப்படும் கருவியோடு ஒத்துப்போவதாகவும் கூறினார்.. ஆஸ்திரேலியாவில் அம்மக்கள் வாழும் இடப்பெயர்கள் தமிழ்சொற்களாக உள்ளதை சுட்டிக்காட்டினார்.அதாவது விண்மலை (winmalai ) காகாடு (kakadu) ஆகிய இடப்பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருப்பினும் தமிழின் ஒலிகுறிப்புச் சொல்லாகவே உள்ளதாக கூறினார். மேலும் அத்தொல்குடிகளின் மரபணுவும் தமிழகப் பலங்குடிகளின் மரபணுவும் ஒத்துப்போவதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஆஸ்திரேலிய மண்ணில் அத்தொல்குடி மக்கள் சுமார்   40 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் கூறினார். ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேரிய பிறகு அத்தொல்குடிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். இதனால் சமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொல்குடிமக்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.  இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதற்கு மன்னிப்பு கோறும் வகையில் தேசிய மன்னிப்புநாள்(National Sorry Day ) கடைபிடிப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்ச்சி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வாழ்த்துரையும் பேரா. மறைமலை இலக்குவனார் அவர்கள் தலைமையுரையும் வழங்கினார் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிறுவனப் பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துக்கொண்டனர்.
 
(புகைப்படச் செய்தி : இடமிருந்து பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ. மணவழகன்,மாநிலக் கல்லூரி மேனாள் பேராசிரியர் மறைமலை இலக்குவனார், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம், ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் மாத்தளை சோமு ஆகியோர்)