December, 2017
பேரறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணாவின் சீர்திருத்தச் சிந்தனைகள்
நிகழ்வு நாள் :
15.09.2017
தலைப்பு : பேரறிஞர் அண்ணாவின் சீர்திருத்தச் சிந்தனைகள்
   

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 2005ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட, பேரறிஞர் அண்ணா தமிழ்மேம்பாடு அறக்கட்டளை சார்பில் 15.09.2017 முற்பகல் பேரறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன (பொ) இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் கொண்டாடப்பெற்றது.

இந்நிகழ்வில் கண்ணியம் இதழ் ஆசிரியர்   ஆ.கோ. குலோத்துங்கன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இவ்விழாவில் மருத்துவர் அண்ணா பரிமளம் எழுதிய  ‘அண்ணாவும் திருக்குறளும்’, ‘பேரறிஞர் அண்ணாவின் சீர்திருத்தச் சிந்தனைகள்’ ஆகிய நூல்கள் வெளியிடப் பெற்றன. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், முனைவர் ஒப்பிலா மதிவாணன் நூல்களை வெளியிடப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரன் திரு. அண்ணா பரிமளம் மலர்வண்ணன் அவர்களும் அவரது துணைவியார் திருமதி ஜெயஸ்ரீ மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயர்த்தி திருமதி இளவரசி ஆகியோரும் படிகளைப் பெற்றுக்கொண்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலப் பேராசிரியர் பா.இராசா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் முனைவர் கோ.செழியன், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், அகரமுதலிப் பதிப்பாசிரியர்கள், நிறுவன அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

படச்செய்தி : சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 15.09.2017, முற்பகல் பேரறிஞர் அண்ணா தமிழ்மேம்பாடு அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது பிறந்தநாள், மருத்துவர் அண்ணா பரிமளம் எழுதிய  ‘அண்ணாவும் திருக்குறளும்’, ‘பேரறிஞர் அண்ணாவின் சீர்திருத்தச் சிந்தனைகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முனைவர் கோ.செழியன், திருமதி இளவரசி, திருமதி ஜெயஸ்ரீ, திரு. அண்ணா பரிமளம் மலர்வண்ணன், கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன், முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் பா.இராசா.