October, 2017    
மொழிபெயர்ப்பு நாள் விழா
நிகழ்வு நாள் :
04.10.2017
தலைப்பு : மொழிபெயர்ப்பு நாள் விழா
   

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 04.10.2017 அன்று முற்பகல் மொழிபெயர்ப்பு நாள் விழா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன (பொ) இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் தொடக்கவுரையாற்றினார். கிழக்குப் பதிப்பகம் முனைவர் பத்ரி சேஷாத்திரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, தனி அலுவலர் திரு.தா.மார்டின் செல்லதுரை நன்றியுரையாற்றினார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் முனைவர் கோ.செழியன், திரு. பாலசுப்பிரமணியம், நிறுவனப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், அகரமுதலிப் பதிப்பாசிரியர்கள், நிறுவன அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.
 
 
படச்செய்தி 1: சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 04.10.2017 முற்பகல் மொழிபெயர்ப்பு நாள் விழாவில் தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் உரையாற்றினார். (உடன் இடமிருந்து) முனைவர் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ) முனைவர் கோ.விசயராகவன், முனைவர் பெ.செல்வக்குமார், கிழக்குப் பதிப்பகம் முனைவர் பத்ரி சேஷாத்திரி, முனைவர் கோ.செழியன், திரு. பாலசுப்பிரமணியம், திரு. இராசாசி ஆகியோர்.
 
 
படச்செய்தி 2 : சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 04.10.2017 முற்பகல் மொழிபெயர்ப்பு நாள் விழாவில் சிறப்புரையாளர் கிழக்குப் பதிப்பகம் முனைவர் பத்ரி சேஷாத்திரி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் சிறப்பு செய்தார். (உடன் இடமிருந்து) முனைவர் கண்ணன், முனைவர் பெ.செல்வக்குமார், திரு. பாலசுப்பிரமணியம், திரு.இராசாசி ஆகியோர்.