October, 2018
சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
22.12.2017
தலைப்பு : சிறப்புச் சொற்பொழிவு
   

22.12.2017 அன்று (வெள்ளிக்கிழமை முற்பகல்) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமெரிக்க ஆய்வறிஞர் ஜான் லூத் (John A. Loud)  அவர்கள் ’Mythology as advertisement in Chidambaram’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். இவர் Rituals of Chidambaram எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்பட்டம் பெற்றவர். சிதம்பரம் நடராசர் கோவிலின் சிறப்பு அம்சங்கள், வழிபாட்டு முறைகள், தொன்மக் கதைகள், தல புராணம் குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் சிதம்பரம் நடராசர் கோவில் பூமியின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதாகவும். இங்கு எம்பெருமான் ஆடவல்லான் புரிந்த தாண்டவம் ஆனந்ததாண்டவம் என்றும் கூறினார்.

இந்நிகழ்விற்கு இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வாழ்த்துரையும், பேரா. முனைவர் பெ. செல்வகுமார் அவர்கள் தலைமையுரையும் ஆற்றினர். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நிகழ்ச்சியினை ஓருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் நிறுவன ஆராய்ச்சி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.