June, 2018
பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வௌியீடும்
நிகழ்வு நாள் :
03.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : புழங்கு பொருள் பாண்பாடு - சங்க காலம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று (3.02.2018) பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை சார்பில் “புழங்கு பொருள் பாண்பாடு - சங்க காலம்” எனும் பொருண்மையில் முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் முனைவர் மூ.சத்தியா அவர்கள் சொற்பொழிவாற்றினார் அவரது சொற்பொழிவு நூலாகவும் வெளியிடப்பட்டது.


படத்தில் நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வெளியிட சுவடியியல் ஆய்வாளர் விஜயராகவன் பெற்றுக் கொண்டார். உடன் பேராசிரியர் (ம) பொறுப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், முனைவர் கோ.பன்னீர்செல்வம், முனைவர் மூ.சத்தியா மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.