April, 2018
தமிழ் வளர்த்த தங்கத் தாரகை
நிகழ்வு நாள் :
04.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : தமிழ் வளர்த்த தங்கத் தாரகை
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இன்று காலை (04.02.2018) அம்மாவின் ஆட்சியில் அருந்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் “தமிழ் வளர்த்த தங்கத் தாரகை” எனும் பொருண்மையில் முனைவர் ப.நாகராசு அவர்கள் சொற்பொழிவு (ம) நூல் வெளியீடும் பிற்பகல் பேரறிஞர் அண்ணா தமிழ் மேம்பாடு அறக்கட்டளைச் சொற்பொழிவு சார்பில் “சமூகச் சிற்பி அண்ணா” எனும் பொருண்மையில் இசுலாமியக் கல்லூரி, இணைப்பேராசிரியர் முனைவர் ப.சிவராசு அவர்கள் சொற்பொழிவு (ம) நூல் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் உடன் முனைவர் ப.நாகராசு மற்றும் முனைவர் பா.சிவராசு உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட ஆய்வு மாணவ மாணவியர்.