October, 2018
இணையவழித் தமிழ்மொழிக் கற்பித்தல் பயிற்சிப் பட்டறை
நிகழ்வு நாள் :
06.01.2018
தலைப்பு : இணையவழித் தமிழ்மொழிக் கற்பித்தல் பயிற்சிப் பட்டறை
   

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனத்தில் 06-01-2018 அன்று தொடங்கி 10 நாள்களுக்கு இணையவழித் தமிழ்மொழிக் கற்பித்தல் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. இப் பயிற்சிப் பட்டறையில் 70 சென்னை மாநகராட்சிப் பள்ளித் தமிழாசிரியர்கள் பயனாளிகளாகப் பங்கேற்கின்றனர். தமிழ்மொழிக் கற்பித்தலில் புதிய அணுகுமுறையை ஒரு பகுதியாகவும் கணினித் தமிழியல் மற்றும் இணையவழித் தமிழ்மொழிக் கற்பித்தல் என்பது இரண்டாவது பகுதியாகவும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு மொழி வல்லுநர்களால் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழா 06-01-2018 அன்று மொழிப் பயிற்சிக் கூடத்தில் நிகழ்ந்தது. இப் பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் வரவேற்புடன் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முழுக்கூடுதல் பொறுப்புமாகிய முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்க, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் மொழித் துறைப் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் பயிற்சிப் பட்டறையைத்  தொடக்கிவைத்தார்.