தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முற்பகல் (09.02.2018) தவத்திரு தனிநாயக அடிகளார் அறக்கட்டளை சார்பில் “மொரிசியசில் தமிழ்க் கல்வியும் பல்லூடகப் பயன்பாடும்” என்ற பொருண்மையில் பேரா.முனைவர் நடராச பிள்ளை அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் கு.சிதம்பரம், முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் வி.இரா.பவித்ரா, இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன், திரு. மார்டின் செல்லதுரை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவி திருமதி ஜெகதா.