February, 2018
பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
10.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : பெருந்தலைவர் காமராசர் மகத்தான மக்கள் தலைவர்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முற்பகல் (10.02.2018) பெருந்தலைவர் காமராசரின் மக்கள்பணியும் ஆளுமையும் அறக்கட்டளை சார்பில் “பெருந்தலைவர் காமராசர் மகத்தான மக்கள் தலைவர்” என்ற பொருண்மையில் பத்திரிகையாளர் திரு. சி. இராசேந்திரன் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.


படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத் துறைத் தலைவர் முனைவர் ஆ. தசரதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் பேரா. கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலினை வெளியிட பொழிவாளர் பத்திரிகையாளர் சி. இராசேந்திரன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். உடன் தக்ஷிணமாற நாடார் சங்கச் சென்னைக் கிளைக் குழுத் தலைவர் திரு. தங்கம் செல்வராஜ் மற்றும் நிறுவனக் கணக்கர் திருமதி லட்சுமி நடராசன் அவர்கள்.