February, 2018
அயல்நாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு பண்பாடு பயிற்சிப் பட்டறை
நிகழ்வு நாள் :
24.01.2018
தலைப்பு : அயல்நாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு பண்பாடு பயிற்சிப் பட்டறை
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் அயல்நாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு, 2018 சனவரித் திங்கள் 24, 25 ஆகிய இரண்டு நாள்கள்: இலக்கணம், இலக்கியம், கலை (ம) பண்பாடு  பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதில் மலேசிய மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்றனர்.
 
இப்பயிலரங்கின் தொடக்கவிழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கினார். இவ்விழாவிற்கு நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார். நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் து. ஜானகி நன்றியுரையும் நல்கினார். அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் இப்பயிலரங்கினை ஒருங்கிணைப்புச் செய்தார்.