February, 2018
ஆய்வு மாணவர் க. அறிவுக்கரசு அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
11.02.2018
தலைப்பு : அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் சொற்பொழிவு
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முற்பகல் (11.02.2018) ஆய்வு மாணவர் க. அறிவுக்கரசு அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் சொற்பொழிவில் “தமிழ் நாடகப் பனுவல்களும் நிகழ்த்து முறைகளும்” என்ற பொருண்மையில் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறை பேராசிரியர் முனைவர் கோ. பழனி அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் அ. சதீஷ், திரு. பெ. கதிர்காமம், பேரா. பா.ரா. சுப்பிரமணியன், பேரா. சு. வேங்கடராமன், பேரா. வா.மு.செ. ஆண்டவர், முனைவர் கோ. பழனி, அறிவுக்கரசு குடும்பத்தினர் மற்றும் நிறுவன முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்.