October, 2018
வைணவ இருக்கை சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
11.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : திருமங்கையாழ்வாரின் திருப்பெருந்தாண்டகம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 70 எனும் பெருவிழா நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் (11.02.2018) வைணவ இருக்கையின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதில் “திருமங்கையாழ்வாரின் திருப்பெருந்தாண்டகம்” என்ற பொருண்மையில் திரு.சி. நம்மாழ்வார் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

படத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் பேரா. கோ. விசயராகவன் அவர்கள், பொழிவாளர் சி. நம்மாழ்வார், வைணவ இருக்கைப் பொறுப்பாளர் திருமதி ஜெயலட்சுமி, நிறுவன ஆய்வு அலுவலர் முனைவர் தி. மகாலட்சுமி.