May, 2018
டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
14.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : பதிப்பாசிரியர் தெ.பொ.மீ
   

தமிழ்த்தாய் பெருவிழா 70-ஐ முன்னிட்டு கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளையின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார். பல்கலைச்செல்வர் தெ.பொ.மீ. அறக்கட்டளையின் சார்பில் புதுச்சேரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.மணி அவர்கள் “பதிப்பாசிரியர் தெ.பொ.மீ., எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றிட நூலும் வெளியிடப்பெற்றது. அறக்கட்டளைக்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கி நூல் வெளியிட முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டர்கள். இவ்விரண்டு அறக்கட்டளைக்கும் அறக்கட்டளைப் பொறுப்பாளர் தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் வரவேற்றுப்பேசினார்கள். முனைவர் பட்ட ஆய்வாளர் நன்றியுரையாற்றினார். ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் நிறுவனப் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.