July, 2018
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
15.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : தமிழில் வேற்றுமைகள் மொழியியல் பார்வை
   

15.02.2018, முற்பகல், தமிழ்த்தாய் பெருவிழா 70-ஐ முன்னிட்டு பேராசிரியர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அறக்கட்டளை சார்பில் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக, மொழியியல் உயராய்வு மைய, உதவிப்பேராசிரியர் முனைவர் ப.குமரேசன் அவர்களின் ‘‘தமிழில் வேற்றுமைகள் மொழியியல் பார்வை’’ எனும் தலைப்பிலும் பிற்பகல் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை சார்பில் தமிழ் ஆசிரியர், சிங்கப்பூர், கல்வி அமைச்சு,  முனைவர் ச. சந்தரசேகரன் அவர்களின் “தமிழும் தமிழர் பண்பாடும் (சிங்கப்பூர்)” எனும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் உதவிப்பேராசிரியர் மற்றும் அறக்கட்டளை பொறுப்பாளர் முனைவர் க.சுசீலா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் தனி அலுவலர் திரு. தா.மார்டின்செல்லதுரை அவர்கள் தலைமையுரையாற்றி நூல் வெளியிட உதவிப்பேராசிரியர் து.ஜானகி அவர்கள் பெற்றுக்கொண்டார், உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கோ.பன்னீர்செல்வம், முனைவர் வி.இரா.பவித்ரா முன்னிலையில் ஆய்வியல் நிறைஞர் மாணவர் திருமதி கி.ஜகதா அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் நிறுவனப் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.