May, 2018
அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
16.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : இவர்தாம் பெரியார்
   

16.02.2018, முற்பகல், தமிழ்த்தாய் பெருவிழா 70-ஐ முன்னிட்டு சு.அறிவுக்கரசு அவர்களால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2015-இல் தொடங்கப்பட்ட ‘அறிவுக்கரசு இரஞ்சிதம்’ அறக்கட்டளையின் சார்பாக ‘பெரியார் வாழ்வியலில் கருத்துப்போர்’ (புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன்), ‘பெரியாரின் இதழ்களில் பெண்விடுதலை’ (முனைவர் சு.இராசலட்சுமி) என்னும் நூல்களின் வரிசையில் பேராசிரியர் அறிவரசன் அவர்களின் ‘இவர்தாம் பெரியார்’ எனும் பொருண்மையிலானச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. நிகழ்விற்கு இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நூல் வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார். அறக்கட்டளைப் பொறுப்பாளர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உதவிப்பேராசிரியர், முனைவர் நா.சுலோசனா வரவேற்றுச் சிறப்பித்தார். திராவிடர் கழக வெளிவுறவுச் செயலாளர் திரு.குமரேசன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பேரா.முனைவர் கு.கதிரேசன், ‘எழுகதிர்’ ஆசிரியர் முனைவர் அரு.கோபாலன், பேராசிரியர் முனைவர் பா.இராசா, ஆய்வு மாணவர்கள், மற்றும் நிறுவனப் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.