November, 2018
டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
17.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : மால்கம் ஆதிசேசய்யாவின் தமிழ்ப் பணிகள்
   

17/02/2018, சனிக்கிழமை தமிழ்த்தாய் பெருவிழா 70-ஐ முன்னிட்டு டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய பதிப்புத்துறை அலுவலர் திரு.ஆ.அறிவழகன் அவர்கள் “மால்கம் ஆதிசேசய்யாவின் தமிழ்ப் பணிகள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அறக்கட்டளையின் சார்பில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய நூலகர் திரு. ரெங்கையா முருகன் அவர்கள் “வடசென்னை வேதாந்திகளும் தமிழ்வேதாந்தப் பணிகளும்” எனும்பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சார்பில் எழுத்தாளர் முனைவர் சு. வேணுகோபால் அவர்கள் “தமிழ்ச் சிறுகதைகளில் உளவியல் கட்டமைப்புகள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்ற நிறுவன பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் வரவேற்புரை நல்கினார். நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் நன்றியுரையாற்றினார். ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.