July, 2018
ஒயிலாட்டப் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
18.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : ஒயிலாட்டப் பயிலரங்கம்
   

18.02.2018, ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தாய் பெருவிழா 70-ஐ முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புலத்தின் சார்பில் ஒயிலாட்டப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.


இப்பயிலரங்கில் பேராசிரியர் வெ. பரமசிவம் வரவேற்புரையாற்றிட நிறுவனப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் பயிலரங்கைத் தொடங்கிவைத்தார். பேராசிரியர் முனைவர் தாமரைப் பாண்டியன் அவர்களும், பேராசிரியர் முனைவர் கா. காமராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  பேராசிரியர் முனைவர் பா. இராசா அவர்கள் ஒயிலாட்டப் பயிற்சியை வழங்கினார். அவருக்குத் துணையாக கெ. சூர்யா,ச. தர்ஷினி ஆகிய மாணவிகள் பயிற்சி வழங்கினர்.


பயிலரங்கில் சென்னைப் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, எம்.ஓ.பி. வைணவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். கலைக்கல்லூரி, சென்னை து.கோ. வைணவக் கல்லூரி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டு பயிற்சிப் பெற்றனர்.


நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.  நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. செ. துளசிராமன் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சியை முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி ஆ. செண்பகவள்ளி தொகுத்து வழங்கினார்.