July, 2018
மறைமலை அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
19.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : மூன்று வரிகளில் முந்நூறு உண்மைகள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 19.02.2018 முற்பகல், தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. இதில் காவல்துறைக் கண்காணிப்பாளர் கவிஞர் மணி சண்முகம் அவர்கள் “மூன்று வரிகளில் முந்நூறு உண்மைகள்” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சொற்பெழிவு நூலினை கவிஞர் மு.முருகேன் அவர்கள் வெளியிட திருமதி மணி சண்முகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன், நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் கா.காமராஜ், நூலாசிரியர் கவிஞர் மணி சண்முகம். இதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் “பழந்தமிழர் உடல் மற்றும் உளநல மேலாண்மை” எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.