July, 2018
தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
19.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : கம்பனின் படைப்பிலக்கணக் கோட்பாடுகள்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 19.02.2018 பிற்பகல் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. முருகேசன் அவர்கள் “கம்பனின் படைப்பிலக்கணக் கோட்பாடுகள்” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவு நூலினை நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வெளியிட நிறுவன முனைவர் பட்ட ஆய்வுமாணவி திருமதி இரா.ஆனந்தஜோதி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார், நிறுவனப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ், நூலாசிரியர் முனைவர் க. முருகேசன்.