November, 2018
இராம சுப்பையர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு
நிகழ்வு நாள் :
28.02.2018
தலைப்பு : திருமாணிகுழிக் கோயிலும் கல்வெட்டுக்களும்
   

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் 70ஆவது பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு, தமிழ்த்தாய் 70 பெருவிழாவில் இன்று (28.02.2018) முற்பகல் 10 மணிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் தினமலர் ராமசுப்பையர் அறக்கட்டளை சார்பில் ‘‘திருமாணிகுழிக் கோயிலும் கல்வெட்டுக்களும்’’ எனும் தலைப்பில் கல்வெட்டியல் அறிஞர் அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் கழகம் சுப்பையா பிள்ளை அறக்கட்டளை சார்பில் ‘‘சங்க இலக்கியத்தில் ஒப்பனைக் கலை’’ எனும் தலைப்பில் நாமக்கல், திரினிட்டி மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா. மோகன் குமார் அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. முனைவர் பெ.செல்வக்குமார்,  அறக்கட்டளைகளின் பொறுப்பாளர் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புல உதவிப்பேராசிரியர்,  முனைவர் சு. தாமரைப்பாண்டியன், முனைவர் வி.இரா.பவித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.