July, 2018
கவியரங்கம் : பொன்னியின் செல்வி புரட்சித்தலைவி
நிகழ்வு நாள் :
25.02.2018
தலைப்பு : கவியரங்கம் : பொன்னியின் செல்வி புரட்சித்தலைவி
   

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் 70ஆவது பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு, தமிழ்த்தாய் 70 பெருவிழாவில் இன்று (25.02.2018) பிற்பகல் 3 மணிக்கு “பொன்னியின் செல்வி புரட்சித்தலைவி”என்னும் தலைப்பில் 70 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உ.வே.சா. விருதாளர், எழுச்சிப்பாவலர் மருது அழகுராஜ் அவர்கள் “அகிலம் போற்றும் அம்மா”எனும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுக் கவியரங்கைத் தொடங்கி வைத்துத் தொடக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்    முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரையாற்றிட கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். அம்மா இலக்கியப் பேரவைத் தலைவர் கவிஞர் பாரதிசுகுமாரன், கவிஞர் துரை.இராஜமாணிக்கம், கவிஞர் கூரம்.துரை, கவிஞர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் 70 கவிஞர்கள் கவிபாடினர். பங்கேற்ற கவிஞர்களுக்கு விஜிபி நிறுவனத் தலைவரும், விஜிபி உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் மற்றும் தலைவருமான கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள்  சான்று வழங்கி நிறைவுரையாற்றினார். முனைவர் ஈ.விஜய் அவர்கள் நன்றி நவின்றார். தமிழார்வலர்கள், நிறுவன ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், நிறுவனப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.