May, 2018
மலேசியப் பயணம் : தமிழாய்வு மாணவர் பரிமாற்றத் திட்டம்
நிகழ்வு நாள் :
02.03.2018
தலைப்பு : மலேசியப் பயணம் : தமிழாய்வு மாணவர் பரிமாற்றத் திட்டம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 15 முனைவர் பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசின் தமிழாய்வு மாணவர் மரிமாற்றத் திட்டத்தின்கிழ்        04 மார்ச்சுத் திங்கள் 2018 அன்று மலேசியா செல்கின்றனர். அவர்கள் 31 மார்ச்சுத் திங்கள் 2018 வரை சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தங்கி கள ஆய்வினை மேற்கொள்கின்றனர்.

மலேசியா செல்லும் மாணவர்களுக்கு 01 மார்ச்சு திங்கள் 2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தமது வாழ்த்தினை வழங்கினார். உடன் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பாண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு க. பாண்டியராசன், தமிழ் வளர்ச்சி (ம) செய்திதுறை செயலாளர் திரு. இரா. வெங்கடேசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன், இத்திட்டத்தின் ஒருங்கினைப்பாளர், அயல்நாட்டுத் தமிழர் புலம் – உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர்  கு. சிதம்பரம் ஆகியோர்.