April, 2018
சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
நிகழ்வு நாள் :
05.03.2018
தலைப்பு : சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
   

தமிழ்நாடு அரசின் தமிழாய்வு மாணவர் மரிமாற்றத் திட்டத்தின்கீழ் 04 மார்ச்சுத் திங்கள் 2018 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 15 முனைவர் பட்ட மாணவர்கள் மலேசியாவிலுள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (Sultan Idris Education University) 04.03.2018 முதல் 31.03.2018 ஆய்வினை மேற்கொள்ள சென்ற தமிழாய்வு மாணவர்களுக்கு அப்பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
      சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம் 1997 ஆம் அண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது 1922 முதல் 1996 வரை கல்வியியல் கல்லூரியாகச் செயல்பட்டு வந்தது. இன்று கல்வியியலுக்கு என்று தனிப்பட்ட சிறப்பு வாய்ந்த  பல்கலைக்கழகமாக  திகழ்ந்து வருகின்றது. அப்பல்கலைகழகத்தின் தமிழ்துறை   ’ தமிழாசிரியர் பயிற்சி பட்ட வகுப்புகளையும் தமிழ் முதுகலை மற்றும் முனைவர்பட்ட ஆய்வுகளையும்’ நடத்தி வருகின்றது என்பது பெருமைக்குறிய ஒன்றாக அமைகின்றது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைக்கு அடுத்து இப்பல்கலைகழகத்தின் தமிழ்த் துறை  மிகப்பெரிய துறையாக விளங்குகின்றது.

        மேலும்  சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே 05.03. 2018 அன்று கலந்தாய்வு (ம) புரிந்துணர்வு நிகழ்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்நிகழ்வில்  தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி,  பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி மேலும் அப்பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட குழுவினரான மொழி மற்றும் தகவல் தொடர்பியல் புலத்தின் முதன்மையர் பேரா. முனைவர் மாஜான் பின் அர்சாத், அப்புலத்தின் தலைவர் சையத் பாக்ரின் அப்பல்கலைக்கழகத்தின் வெளியுறவு இயக்ககத்தின் துணை இயக்குநர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கு வகித்தனர். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் பொறுப்பாளரும் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்  கு. சிதம்பரம் அவர்கள் இந்நிகழ்வில் பங்கு வகித்தார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து காட்சியுரை  மூலம் விளக்கம் அளித்தார்.