June, 2017    
இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
01.02.2013
தலைப்பு : திருமுறைகளில் அகப்பொருள் மரபுகளும் தொண்டு நெறிகளும்
   

01.02.2013 பிற்பகல், முதல் நிகழ்ச்சியாக திருமிகு. இராமலிங்க அபிராமி அறக்கட்டளை சார்பாக “திருமுறைகளின் அகப்பொருள் மரபுகளும் தொண்டு நெறிகளும்” என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் ‘திருமுறைகளில் அகப்பொருள் மரபுகளும் தொண்டு நெறிகளும்’ என்ற தலைப்பிலான நூலினை, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசுச் செயலர் முனைவர் மூ. இராசாராம் அவர்கள் வெளியிட, கவிஞர் கலைமாமணி திரு ஏர்வாடி இராதாகிருட்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் முனைவர் க. முருகேசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் அவர்கள் பொழிவுரை ஆற்றினார்கள். கூட்டத்தில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.