June, 2017    
டாக்டர் உ.வே.சாமிநாதையர் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
04.02.2013
தலைப்பு : சுவடிப் பதிப்பு முன்னோடிகள்
   

04.02.2013 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் உ.வே.சா. அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் ‘சுவடிப் பதிப்பு முன்னோடிகள்’ எனும் தலைப்பில் புதுவைப் பல்கலைக்கழக பாரதியார் தமிழியல் புலப் பேராசிரியர் முனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்கள் பொழிவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு அலுவலர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரை நல்கினார். இதனைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலை வெளியிட முதல் படியை ஆய்வியல் நிறைஞர் மாணவர் முருகன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நிறைவாக இந்நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவி உமாசங்கரி நன்றியுரை கூறினார்.