June, 2017    
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
05.02.2013
தலைப்பு : விடுதலைச் சிந்தனையாளர் வ.உ.சிதம்பரனாரின் தமிழியற் பண்புகள்
   

05.02.2013 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி அளவில் வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் ‘விடுதலைச் சிந்தனையாளர் வ.உ.சிதம்பரனாரின் தமிழியற் பண்புகள’" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு அலுவலர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.  இதனைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர்  கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலை வெளியிட முதல் படியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பெற்றுக் கொண்டார். 

 
பொழிவாளரான மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் (ம) துணை முதல்வர் தமிழ்த்துறை முனைவர் பூவை சு. செயராமன் அவர்கள் நூலில் இடம்பெற்ற வ.உ.சி.யின் தமிழியற் நாடகப் பண்புகளை மிகச் சிறப்புற எடுத்துரைத்துப் பொழிவு  நிகழ்த்தினார். நிறைவாக இந்நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் மீ. அபிதகுஜாம்பாள் நன்றியுரை கூறினார்.