August, 2017    
மொழியியல் புலம் மொழியியல் சிறப்புப் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
06.02.2013
தலைப்பு : பள்ளிக் கல்வியில் தமிழ்மொழி கற்பித்தல் அணுகுமுறைகள்
   

பிப்ரவரி திங்கள் தொடர் நிகழ்வில்  நான்காவதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தால் ‘பள்ளிக் கல்வியில் தமிழ்மொழிக் கற்பித்தல் அணுகுமுறைகள்" எனும் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கு (06.02.2013 - 08.02.2013) நடத்தப்பட்டது.  இப்பயிலரங்கில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70 பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழார்வலர்கள் என ஏறத்தாழ 150 பேர் கலந்து கொண்டனர்.

பயிலரங்கில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் பேராளர்களை அறிமுகப்படுத்தினார்.  இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் இரா. கோவிந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் பயிலரங்க ஒழுங்கு நடைமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து முதல் அமர்வாக மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தேசிய தேர்வுப் பணி இயக்குநர் முனைவர் எம். பாலகுமார் அவர்கள் `தமிழ்மொழிப் பாட நுண் தேர்வும் மதிப்பீடும்’ எனும் தலைப்பிலும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தரவுத் தொகுப்பியத்தின் தலைவர் முனைவர் எஸ். இராமமூர்த்தி அவர்கள் `சமுதாயமும் மொழிச் சூழலும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். பயிலரங்கின் நிறைவு விழா 08.02.013 மாலை நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செம்மொழித் தமிழாய்வு மத்தியநிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் கே.இராமசாமி அவர்கள் கலந்துகொண்டு, பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி, நிறைவுப் பேருரை ஆற்றினார்.