March, 2017    
சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம் நவீன நாடகம் குறித்த தேசியப் பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
11.02.2013
தலைப்பு : கலைகளும் கலைஞர்களும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் மூலம் ‘கலைகளும் கலைஞர்களும்’என்ற பொருண்மையிலான நவீன நாடகம் குறித்த தேசியப் பயிலரங்கம் பிப்.11,12,13-2013 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இப்பயிலரங்கை சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தில் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ஆ.மணவழகன், முனைவர் அ.சதீஷ் ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்திருந்தனர். மூன்று நாள் பயிலரங்கின் தொடக்க விழாவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.வியசராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். துவக்க உரையைக் கூத்துபட்டறை நிறுவனர் திரு ந.முத்துசாமி அவர்களும் மையக் கருத்துரையை நடிகர் திரு சண்முகராஜா அவர்களும் வாழ்த்துரையை பொதிகை தொலைக்காட்சி இயக்குநர் முனைவர் பாலரமணி அவர்களும் வழங்கினர்.

மூன்று நாள் பயிலரங்கு பயிற்சி அளித்தல் மற்றும் கலை நிகழ்வு என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது. கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, முனைவர் செ.ரவீந்திரன், முனைவர் இராஜா ரவிவர்மா, திரு ச.முரகபூபதி, முனைவர் வேலு சரவணன், முனவர் மங்கை, முனைவர் ஜீவா, திரு கருணா பிரசாத் ஆகியோர் பயிற்சியளித்தனர். வேலு சரவணனின் ‘கடல் பூதம்’, முருக பூபதியின் ‘சூர்பணங்கு’ ஆகிய நாடகங்களும் நிகழ்த்தப்பட்டன. 
 
பயிலரங்கின் நிறைவு விழாவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார். அருங்காட்சியங்கள், கலைபண்பாட்டுத் துறை ஆணையர், அரசு செயலர் முனைவர் சோ.சு.ஜவஹர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நாடக இயக்குநர் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்த பயிலரங்கு நிறைவுற்றது.