August, 2017    
திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
18.02.2013
தலைப்பு : சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான திரு. சி.மா. துரையரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை" எனும் பொருண்மையில் 18.02.2013 அன்று சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.  

 
இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு காலை 10.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள் என ஏறத்தாழ 80 பேர் கலந்து கொண்டனர். இப்பொழிவிற்கு நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியரும்,  இவ்வறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் து. ஜானகி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். நூலின் முதல் படியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புல முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, "சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை" எனும் தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள் பொழிவுரை ஆற்றினார். இச்சொற்பொழிவின் நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் ப. முருகன் நன்றியுரை கூறினார்