July, 2017    
கலாநிலையம் டி.என்.சேஷாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
20.02.2013
தலைப்பு : ஆதி சைவம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான கலாநிலையம் டி.என். சேஷாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "ஆதி சைவம்" எனும் பொருண்மையில் 20.02.2013 அன்று சொற்பொழிவு நடைபெற்றது.  

 
இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு காலை 11.00 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சைவ சமயப் பெருமக்கள் என ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பொழிவிற்கு நிறுவன சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளரும் இவ்வறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். நூலின் படிகளை சிவாகம பக்த ஜனா ட்ரஸ்ட் தலைவர் திரு. ஜி. ரமேஷ்பாபு அவர்களும், சென்னை, வடபழனி கோயில் அர்ச்சகர் திரு. நா. பாலு குருக்கள் அவர்களும் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, "ஆதி சைவம்" எனும் தலைப்பில் சென்னை மாநிலக் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் பா. இராஜசேகர் அவர்கள் பொழிவுரை ஆற்றினார். இச்சொற்பொழிவின் நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் க. சரவணன் நன்றியுரை கூறினார்.