September, 2017    
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
21.02.2013
தலைப்பு : தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்" எனும் பொருண்மையில் 21.02.2013 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. 

இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு காலை 11.00 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பொழிவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நடுவணரசின் இந்தியப் படைத்தொழில் பணி அதிகாரி முனைவர் சா.த. மெய்ம்மொழி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். திருவாரூர் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் கவிஞர் நாகை நாகராசன் அவர்கள் கருத்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, "தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்" எனும் தலைப்பில் கலைமாமணி அ. மறைமலையான் அவர்கள் பொழிவுரை ஆற்றினார். இச்சொற்பொழிவின் நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புல உதவிப்பேராசிரியரும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் ஆ. மணவழகன்  நன்றியுரை கூறினார்.