April, 2017    
புதிய அறக்கட்டளை தொடக்கம்
நிகழ்வு நாள் :
21.02.2013
தலைப்பு : தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்" எனும் பொருண்மையில் 21.02.2013 அன்று சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்வில் ‘தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை நிறுவனத்தில் தொடங்கப்பட்டது. இவ்வறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை முனைவர் சா.த.மெய்ம்மொழி அவர்கள் வழங்கினார். மேலும், ரூபாய் இருபத்தைந்தாயிரத்தைக் கவிஞர் நாகை நாகராசன் அவர்கள் வழங்குவதாகக் கூறினார். 

 
‘தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்’ என்ற பெயரிலான அறக்கட்டளைக்கு முனைவர் மெய்ம்மொழி அவர்கள் வழங்கிய ரூபாய் ஒரு இலட்சத்துக்கான காசோலையை அவர் சார்பில் கவிஞர் நாகை நாகராசன் அவர்கள் வழங்க, அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் பெற்றுக்கொள்கிறார்