March, 2017    
டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
22.02.2013
தலைப்பு : திராவிட மொழிகளும் திராவிடமொழி ஆய்வுகளும்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "திராவிட மொழிகளும் திராவிடமொழி ஆய்வுகளும்"" எனும் பொருண்மையில் 22.02.2013 அன்று சொற்பொழிவு நடைபெற்றது.  

 
இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு பிற்பகல் 2.30 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏறத்தாழ 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பொழிவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து, "திராவிட மொழிகளும் திராவிடமொழி ஆய்வுகளும்" எனும் தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் ச. மனோகரன் அவர்கள் பொழிவுரை ஆற்றினார். இச்சொற்பொழிவின் நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல் நிறைஞர் மாணவர் எ. இராஜேஷ்  நன்றியுரை கூறினார்.