March, 2017    
சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம் உலகத் தாய்மொழிநாள் சிறப்பு நிகழ்வுகள்
நிகழ்வு நாள் :
21.02.2013
தலைப்பு : உலகத் தாய்மொழிநாள்
   

21.02.2013 அன்று உலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையேயான கவிதை-கட்டுரை-பேச்சு-ஓவியப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்வினை சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் மற்றும் அயலகத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். போட்டிகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறுவன இயக்குநர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.