October, 2017    
டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
23.02.2013
தலைப்பு : பாணர் இனவரைவியல்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் ஒன்றான மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா டாக்டர் ஜெ ஜெயலலிதா அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் "பாணர் இனவரைவியல்" எனும் பொருண்மையில் இன்று (23.02.2013) சொற்பொழிவு நடைபெற்றது.இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவு முற்பகல் 11.00 மணியளவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏறத்தாழ 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பொழிவிற்கு முனைவர் ஆ. தசரதன் வரவேற்புரை ஆற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் சொற்பொழிவு நூலினை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். நூலின் முதல் படியை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகர் திரு. ரெங்கையா முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து, "பாணர் இனவரைவியல்" எனும் தலைப்பில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் பொழிவுரை ஆற்றினார். இச்சொற்பொழிவின் நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியரும், இவ் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நன்றியுரை கூறினார்.