August, 2017    
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
நிகழ்வு நாள் :
24.02.2013
தலைப்பு : தமிழ்க் கணினி மொழியியல் சிறப்புப் பயிலரங்கம் தொடக்கவிழா
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான 24.02.2013 அன்று  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைந்து தமிழ்க் கணினி மொழியியல் எனும் தலைப்பில் ஐந்து நாள் சிறப்புப் பயிலரங்கம் தொடங்கப்பெற்றது. இப் பயிலரங்கின் தொடக்கவிழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கூட்ட அறையில் காலை 10.00 மணி அளவில் தொடங்கியது. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தமிழ்க் கணினி மொழியியல் பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் பயிலரங்க அறிமுகவுரையினை ஆற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. தாண்டவன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அலுவலர் முனைவர் லி. இராமமூர்த்தி அவர்கள் மையக் கருத்துரையினை வழங்கினார். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணோடு தமிழ்க் கணினி மொழியியல் சிறப்புப் பயிலரங்கின் தொடக்கவிழா இனிதே நிறைவடைந்தது.

 
இச்சிறப்புப் பயிலரங்கின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் சரண்யா நித்ய வித்யாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் அவர்கள் நிறுவன வளாகத்தில் 65 பழ மரக் கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் மாணவர்களின் வசதிக்காகப் புதிய சிற்றுண்டி உணவகத்தையும் திறந்து வைத்தார்.