October, 2017    
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
நிகழ்வு நாள் :
28.02.2013
தலைப்பு : தமிழ்க் கணினி மொழியியல் சிறப்புப் பயிலரங்கம் நிறைவு விழா
   

தமிழ் மொழி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி திங்கள் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான 24.2.2013 ஆன்று நிறுவனத்தில் தொடங்கப்பட்ட தமிழ்க் கணினி தொடர்பான பயிலரங்கு 28.2.2013 அன்று நிறைவு பெற்றது. அதன் நிறைவு விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கணினித் தமிழ் மொழியியல் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் கருத்துரை வழங்கினார். பயிலரங்க நிறைவுரையை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலர்  முனைவர் கி.தனவேல் அவர்கள் வழங்கினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.