March, 2017    
இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் உ.த.நி இயக்குநர்
நிகழ்வு நாள் :
14.08.2013
தலைப்பு : இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் உ.த.நி இயக்குநர்
   

இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம், இலண்டனில் ஆகஸ்ட் 14 முதல் 18 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு மாநாட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் முனைவர்       கோ. விசயராகவன் அவர்களும் நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்களும் கலந்துக்கொண்டனர். மாநாட்டின் துவக்கவிழாவில் இயக்குநர் அவர்கள் மாநாட்டு கட்டுரைகளின் தொகுப்பினை வெளியிட்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்: தமிழியல் ஆய்வு மாநாட்டின் இன்றையத் தேவை குறித்தும், உலகத் தமிழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரச்சி தலைவி அம்மா அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் அரும் பணிகள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

மேலும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழை தேய புலத்தின் சமஸ்கிருத பேராசிரியர் கிரிஸ்டோபர் மற்றும் எகிப்தியவியல் பேராசிரியர் ஜான்பெய்னி ஆகியோருடன் இயக்குநர் அவர்கள் இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரச்சித் தலைவி அம்மா அவர்கள் ஜி.யு.போப் அவர்களின் பெயரில் விருது அறிவித்திருப்பது தங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கிரிஸ்டோபர் அவர்களும் ஜான் பெய்னி அவர்களும் தெரிவித்தனர். மேலும் அம்மா அவர்களுக்கு ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில் சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கைகள் இருப்பதைப் போன்று தமிழ் மொழிக்கும் ஆய்விருக்கை ஒன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஏற்படுத்த ஆவலாக உள்ளோம் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தங்களின் வேண்டுகோளினைத் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.