March, 2017    
பயிலரங்கம்
நிகழ்வு நாள் :
07.10.2013
தலைப்பு : மொழி, இலக்கிய மதிப்பீடு மற்றும் ஆய்வு நெறிமுறைகள்
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய தேசியத் தேர்வுப் பணியுடன் ஒருங்கிணைந்து மொழி, இலக்கிய மதிப்பீடு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற பொருண்மையில் 07.10.2013 முதல் 11.10.2013 வரை நடத்தும் பயிலரங்கின் தொடக்கவிழா 07.10.2013 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கணினி மொழியியல் ஆய்வறிஞர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தலைமையுரையாற்றினார். இந்திய தேசியத் தேர்வுப் பணியின் முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் வ. இளங்கோவன் பயிலரங்கத்தினை அறிமுகம் செய்து வைத்தார். செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் தொடக்கவிழாப் பேருரை நிகழ்த்தினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், இணைப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் நன்றியுரைத்தார்.