July, 2017    
பெ.நா.அப்புசாமி பெ.நா.அப்புசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
நிகழ்வு நாள் :
05.02.2014
தலைப்பு : டாக்டர் சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டு
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் விழா தொடர் நிகழ்வாக 05.02.2014 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்ற அறிவியல் தமிழறிஞர் பெ.நா. அப்புசாமி அறக்கட்டளையின் சொற்பொழிவில் “டாக்டர் சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். பொழிவின் நூல் வெளியீடும் நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. சுலோசனா மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து. ஜானகி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.