April, 2017    
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
13.02.2014
தலைப்பு : வேதாத்திரி மகரிஷியும் மதநல்லிணக்கமும்
   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா முன்னிட்டு பிப்ரவரி திங்கள் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை சொற்பொழிவு நடைப்பெற்றுவருகிறது இதன் வரிசையில்  இன்று 13.02.2014 முற்பகல் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைச் சொற்பொழிவும் மற்றும் நூல்வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் பொழிவாளரும் நூலாசிரியருமான முனைவர் பெ.சத்தியபாமா, தமிழ்த் துறைத் தலைவர், மீனாட்சிக் கல்லூரி, சென்னை அவர்கள் ‘வேதாத்திரி மகரிஷியும் மதநல்லிணக்கமும்’ எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். இயக்குநர் நூல்வெளியிட வேதாத்திரி மகரிஷி சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் திரு.சுந்தரம் மற்றும் திரு.ஞானசம்பந்தன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார். உடன் நிறுவனர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் தி.மகாலட்சுமி, மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.