March, 2017    
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
18.02.2014
தலைப்பு : மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம்
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா முன்னிட்டு பிப்ரவரி திங்கள் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை சொற்பொழிவு நடைப்பெற்று வருகிறது இதன் வரிசையில்  இன்று 18.02.2014 முற்பகல் டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவும் மற்றும் நூல்வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் பொழிவாளரும் நூலாசிரியருமான முனைவர் மு. பாலகுமார், தலைவர், தேசிய நுண்தேர்வு மற்றும் மதிப்பீட்டு மையம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்  அவர்கள் ‘மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம்’ எனும் பொருண்மையில் அவர்கள் சொற்பொழிவாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து. ஜானகி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.